tamilnadu

img

ம.பி. சட்டமன்றத்தில்  இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு?  முன்கூட்டியே தெரிவிக்க சபாநாயகர் மறுப்பு

போபால்:
மத்தியப்பிரதேச சட்டமன்றத்தில் மார்ச் 16 திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர்  லால்ஜி டான்டன் சபாநாயகர் நர்மதா பிரசாத் பிராஜாபதிக்கு உத்தரவிட்டுள்ளார்.மத்தியப்பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிருப்தி மனநிலையில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரதுஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பாஜக விரித்த வலையில் சிக்கினர்.

22 எம்எல்ஏக்களும்  தங்களது பதவியை ராஜினாமா செய்து, விலைபோகினர்.  இதைத்தொடர்ந்து சிந்தியாவும் அவரது ஆதரவாளர்களும் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில்இணைந்தனர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.இதனை எதிர்பார்த்துக் காத்திருந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் கட்சிநிர்வாகிகளுடன் ஆளுநர் லால்ஜி டான்டனை சந்தித்து, சட்டமன்றத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தினார்.இந்த நிலையில் சபாநாயகர் கூறுகையில், இம்ரதி தேவி,துளசி சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத், மகேந்திரசிங் சிசோடியா, பிரத்யுமன்சிங் தோமர், பிரபு ராம் சவுத்ரி ஆகிய6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை மட்டும் ஏற்றுக் கொண் டுள்ளேன் . நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து நாளைதான்(திங்கள்) உங்களுக்குத் தெரியவரும். என்னுடைய முடிவைநான் முன்கூட்டியே உங்களிடம் தெரிவிக்கமாட்டேன் என்றார்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமா ஏற்கப் பட்டுள்ளதால் சட்டமன்றத்தில்  மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 222-ஆக குறைந்துள்ளது.

;